Sunday 2 December 2012

agastheeswarar temple,panjetti,pic 1--5













அகத்தீஸ்வரர் கோவில்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர்.



இக்கோவில் சென்னையிலிருந்து வடமேற்கில், சுமார் 28 கி. மீ தொலைவில் கல்கத்தா நெடுங்சாலையில் (ஜி.என்.டி ரோடு காரனோடையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில்) உள்ளது.  பஞ்செட்டி பேருந்து நிறுத்ததிலிருந்து வலது பக்கத்தில் உள்ள சாலை வழியாக உள்ளே சென்றால், 200 மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாக செல்லும் 112, 112A, 112B, 131,131A, 131B, 132, 133M, 90, 58C முதலிய பேருந்துகளில் ஏறி பஞ்சேஷ்டி நிறுத்தத்தில் இறங்கி, இகோவிலுக்கு வரலாம்.

 
தல வரலாற்றின்படி ஒரு முறை சுகேது என்ற அரக்கன் மகிஷாரண்யம் என்ற வனத்தில் இருந்த மகா ராட்சதர்களான மத்தன், உன்மத்தன், பிரமத்தன் என்பவர்களோடு சண்டையிட்டு சோர்ந்து போய் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதையறிந்த சுகேதுவின் மூன்று மகன்களும் ஒன்று சேர்ந்து அந்த மூன்று மகா ராட்சதர்களையும் கொன்று போட்டு, பின்னர் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர். இதனால் உலகில் பிரளயம் ஏற்பட்டு அனேக உயிர்களும் அவதிப்பட்டதை கண்ட அகத்திய முனிவர், சமுத்திரத்தை பானகம் போல் அருந்திவிட்டார்.
சமுத்திரம் வரண்டதால் வேதனையடைந்த வருடன், குபேரன் ஆகியோர் அகத்திய முனிவரிடம் பணிந்து வேண்டியதால் சமுத்திரத்தை முதலில் கொஞ்சம் உமிழ்ந்து பஞ்சேஷ்டி தலத்தில் ஒரு புண்ணிய தடாகத்தை அகத்தியர் ஏற்படுத்தினார். பின், தன்னுள் மீதமிருந்த சமுத்திரத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றார். அகத்திய முனிவரின் வயிற்றில் சிக்கிக்கொண்ட சுகேதுவும் அவனது மகன்களும்தங்களின் பாவ விமோசனத்திற்காக அகத்திய முனிவரை மனம் உருகி வேண்டினர்.
 மனம் இறங்கிய அகத்தியரும் அவர்களை, தான் உருக்கிய புண்ணிய தடாகத்தில் (அகத்திய தீர்த்த குளம்) மூழ்க செய்து சிவாலயத்தில்  ஐந்து யாகங்கள் (தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம்) வளர்க்க ஏற்பாடு செய்தார்.பஞ்சேஷ்டி (பஞ்ச-ஐந்து, இஷ்டி-யாகம்) திருத்தலத்தில் ஐந்து யாகங்களை வளர்த்து அந்த யாக விபூதியை சுகேது மற்றும் அவனது மகன்களுக்கு பூசி அவர்களுக்கு பரமபதம் அருளினார் அகத்தியர்.அகத்திய முனிவர் கூறியபடி சுகேது அரக்கனும் அவனது குடும்பத்தினரும் அகத்திய தீர்த்த குளத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு யாகம் வளர்த்து சாபவிமோசனம் பெற்றதால், அங்கு வரும் பக்தர்களும் அந்த குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டால் சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.
மேலும் அகத்திய முனிவர் வைத்திய துறையிலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அந்த குளத் தீர்த்தத்தில் மூழ்கி கோவிலை வலம் வந்து அங்கப்பிரதட்சணம், அடி பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபாடு செய்தால் வியாதிகள் குணம் அடைவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment